Thursday, May 10, 2018

காலா படவிழாவா காலப் படவிழாவா? கவிஞர் தணிகை

காலா படவிழாவா காலப் படவிழாவா? கவிஞர் தணிகை

Image result for kaala

ஒவ்வொரு படம் வெளியிடும் கட்டத்திலும் சிவாஜிராவ் கெய்க்வாட் என்னும் ரஜினிகாந்த் தமது படம் வெற்றி பெற வேண்டும் என்ற உள் நோக்கத்தில் இது போன்ற துப்பாக்கி குண்டுகளை வானை நோக்கி சுடுவது வழக்கம். அந்த ஸ்டைலைப் பார்த்து மக்கள் கூடி ஆரவாரம் செய்வதும் வழக்கம்

இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய நதி நீரை இணைப்பதே வாழ்வின் இலட்சியம் என்றும் அப்படி செய்து முடித்து விட்டால் அடுத்த நாளே இறந்து விட்டாலும் அது சந்தோசமே...என்று தலைவர் முழங்க... அங்கே கூடியிருந்த இரசிகப் பட்டாளம் அய்யோ அய்யா நிரந்தர முதல்வர் அம்மா மாதிரி என்றும் நிரந்தர முதல்வராக இருக்க வருவார் என்ற நினைப்புடன் இருக்க இவர் என்ன இப்படி இறப்பை பற்றி இப்போதே பேசுகிறார் என அங்கலாய்த்திருக்கிறார்கள் என்று செய்திகள் தெரிவித்துள்ளன.

லிங்கா அருமையான படம் போகவில்லை என வருத்தப்பட்டிருக்கிறார். எந்திரன் வெற்றிப் படம் வெற்றி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என  வருத்தப்பட்டிருக்கிறார், மேலும் மற்ற படங்களைப் பற்றி எல்லாம் பேசி  கவனமாக அரசியல் பிரவேசம் பற்றிய கருத்தை பேசாமல் ஒதுக்கி ஒதுங்கி இருக்கிறார்.

இவர்தான் முதல்வர் அடுத்த ஆண்டில் தெரியும் பாருங்கள் என சாருஹாசன் வேறு ஆருடம் சொல்லி இருக்கிறார். மத்திய தேர்தலும் மாநிலத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் மறுபடியும் பரிசீலித்து வருகிறது...
Image result for kaala


படம் வெற்றிப் படமானபிறகு அரசியல் கட்சி அறிவிப்பு செய்வார் போலும். மருமகன் தனுஷ் வேறு சிறப்புரையாற்றியிருக்கிறார்...ஏ.சி. சண்முகம் போன்ற மாபெரும் எம்.ஜி.ஆர். இரசிகர்கள் மாபெரும் பணக்காரர்கள் இவரது கூட்டத்தில் தவறாது இடம் பெற்றிருக்க விழா இனிது முடிந்திருக்கிறது.

அடுத்த கூட்டத்தில் 2. 0 விற்கு அல்லது அதன் முன்பாகவே இவரது கட்சி அறிவிப்பு பற்றியும் விஜய் இரசிகர் மன்ற ஒத்துழைப்பு பற்றியும் செய்திகள் வரக்கூடும்.

Image result for kaala

இதற்கெல்லாம் முன் இவர் எவ்வளவு பெறுகிறார் படத்துக்கு எனக் கேட்டுள்ள கேள்விக்கு எனது ரேட்டை எனது சம்பளத்தை தருபவர்கள் முடிவு செய்து கொடுக்கிறார்கள்...நானல்ல என அந்த கேள்வியிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார். எம்.ஆர்.இராதா சொன்னபடி வரி என்பது மக்களின் பணம், தியேட்டரில் டிக்கட் வாங்குவது யாவும் மக்கள் பணம் அதை வாரி சுருட்ட விழா...யாரோ ஒருவர் முதல்வர் ஆகட்டும் ஆனால் அந்த ஆட்சி மக்களுக்கு நல்ல ஆட்சியாக இருந்தால் போதும் அனைவருமே பாராட்டுவார்கள்

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment